கலைஞர் பிறந்த நாளில் ரூ.4000..! சொன்னது என்னாச்சு? ரூ.2000 வாங்க தவியாய் தவிக்கும் ஏழைகள்..!

By Selva KathirFirst Published Jun 10, 2021, 1:32 PM IST
Highlights

கலைஞர் பிறந்த நாள் கடந்த வாரமே முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை மீதமுள்ள 2000 ரூபாய் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. ஆனால் கலைஞர் பிறந்த நாளன்று இந்த மீதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்துவிட்டார். அந்த திட்டம் தொடங்கி வைத்ததோடு அப்படியே நிற்கிறது. 

திமுக ஆட்சிக்கு வந்த உடன் கலைஞர் பிறந்த நாளன்று அனைத்து மக்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் இதுவரை ரூ.2000 மட்டுமே கிடைத்துள்ளதால் எஞ்சிய 2000 ரூபாய்க்கு ஏழை எளிய மக்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். முழு ஊரடங்கால் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆனால் அதனை எடப்பாடி அரசு ஏற்கவே இல்லை. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மு.க.ஸ்டாலின் ஒரு மிக முக்கியமான வாக்குறுதி அளித்தார்.

அது என்ன என்றால் திமுக ஆட்சிக்கு வந்த உடன் கொரோனா நிவாரண நிதியாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். ஏற்கனவே எடப்பாடி அரசு ரூபாய் ஆயிரம் கொடுத்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் மீதமுள்ள 4ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று செல்லும் இடமெல்லாம் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதுவும் ஜூலை 4 கலைஞர் பிறந்த நாளன்று நான்காயிரம் ரூபாயும் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார் மு.க.ஸ்டாலின். தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த உடன் கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து அதனை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார்.

இதனிடையே கலைஞர் பிறந்த நாள் கடந்த வாரமே முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை மீதமுள்ள 2000 ரூபாய் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. ஆனால் கலைஞர் பிறந்த நாளன்று இந்த மீதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்துவிட்டார். அந்த திட்டம் தொடங்கி வைத்ததோடு அப்படியே நிற்கிறது. இதுவரை எந்த ரேசன் கடையிலும் 2000 ரூபாய் வழங்கும் பணிகள் துவங்கவே இல்லை. இதே போல் கலைஞர் பிறந்த நாளன்று ரேசன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ஆனால் அந்த மளிகை பொருட்களும் தற்போது வரை ஏழை எளிய மக்களுக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படவில்லை. அதாவது பெயரளவிற்கு கலைஞர் பிறந்த நாளில் திட்டத்தை மட்டும் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். ஆனால் ஏழை எளிய மக்கள் இதனால் பலன் அடையவில்லை. அதாவது மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றே கூறலாம். நான்காயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு 2000 ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு மீதம் 2000 ரூபாயை வழங்கவில்லை என்பதும் வாக்குறுதியை நிறைவேற்றாததாகவே கருதப்படும். இதனிடையே தமிழக அரசு கஜானா காலியாகவிட்டதால் தான் 2000 ரூபாயை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் ரேசன் கடைகளில் 15 வகை மளிகைப் பொருட்கள் கொடுக்கவும் தமிழக அரசின் நிதி நிலைமை உகந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதை எல்லாம் சரி செய்ய வேண்டிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜேனோ ட்விட்டரில் பாலோயர்களுடன் சண்டையிட்டு அவர்களை பிளாக் செய்வதில் கவனம் செலுத்தி வருவது தான் திமுக அரசின் துயரம்.

click me!