இது என்ன அதிமுகவுக்கு வந்த சோதனை..? அடுத்த ஆட்டத்திற்கு தயாரான சசிகலா..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2021, 1:08 PM IST
Highlights

 ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து அமலுக்கு வந்ததும் சசிகலா  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்.

அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோவும் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உளுந்தூர்பேட்டை ஆனந்தனிடம் சசிகலா பேசும் ஆடியோவும் நேற்று வெளியாகியது. இன்னும் அடுத்தடுத்து அ.தி.மு.க.  நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோவும் வெளிவர உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் உள்ள நிர்வாகிகள் சிலர் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதத்தை படித்து பார்த்து அவர்களுடன் சசிகலா உரையாடி வருகிறார். அந்த வகையில்தான் அவர் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த தீர்ப்பு வருவதை பொறுத்து சசிகலாவின் அரசியல் நிலைப்பாடானது அமையும்.

தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றுமையின்மை மற்றும் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால் வேதனை அடையும் நிர்வாகிகள் சசிகலாவை தொடர்பு கொண்டு தங்களது ஆதங்கத்தை கடிதம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சசிகலா பேசி வருகிறார். அவர் தமிழ்நாடு முழுவதும் சென்று விரைவில் சுற்றுப்பயணம் செய்வார் என தகவல்கள் வருகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் அமலில் உள்ளது. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து அமலுக்கு வந்ததும் சசிகலா  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 

click me!