ரூ.300 கோடி போச்சு... ரோஷத்தோட ஆட்சி விட்டு ஓடிடுங்க... சசிகலாவையும் வம்பிற்குழுத்த கமல்ஹாசன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2021, 2:30 PM IST
Highlights

அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் தனக்கு ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி எனக்கு வலை இல்லை. 

அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் தனக்கு ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி எனக்கு வலை இல்லை. ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது வேட்பாளர்களை ஆதரித்து எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திருச்சி, திருவெறும்பூர் பஸ் ஸ்டான்ட் அருகே மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பிறகு மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ’’எல்லா ஊர்களில் இருக்கும் பிரச்னைகளுக்கான திட்டங்களுடன் தான் மக்களை சந்திக்க வந்திருக்கிறோம். ரோஷத்தோடு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். ஸ்டாலின், எடப்பாடி எல்லாம் சொல்வதை வைத்து பார்க்கையில் நம் பணம் ரூ.30 லட்சம் கோடி பறிபோகியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி, சுற்றுப் புறச்சூழல் கொடுப்பதே மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களை பற்றி பேசினால் மட்டும் போதாது. அதற்கான வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் வரும் போது வண்டியில் சோதனை செய்தார்கள். என்னிடம் நேர்மை, வியர்வையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. டீ குடிக்க சில்லறைகள் வைத்திருக்கிறேன். என்னை சோதனை செய்தது சரி தான். கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்தார்களே அவர்களை எல்லாம் யார் கேட்டார்கள்?

அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் தனக்கு ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி எனக்கு வலை இல்லை. ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என அதிரடியாக பேசினார்.

click me!