ராக்கெட் ராஜா.. என் குடும்பத்துல தலையிட நீ யாரு..?? சிறையில் இருந்து வீடியோ வெளியிட்ட ஹரி நாடார்.

By Ezhilarasan BabuFirst Published Mar 1, 2022, 6:09 PM IST
Highlights

ஆனால் இப்போது அவர் தேவையில்லாமல் பல விஷயங்களில் தலையிடுகிறார். ஹரி நாடாராகிய நான் யாருடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது  எனது தனிப்பட்ட உரிமை.அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். அதை ராக்கெட்ராஜா முடிவு செய்யக்கூடாது. எனக்கும் என் மனைவி ஷாலினிக்கும் என்ன கருத்து வேறுபாடு என்பது எங்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும். 

தான் யாருடன் வாழ வேண்டும் என்பதை தான் தான் முடிவு செய்வேண்டுமே தவிர ராக்கெட்ராஜா முடிவு செய்ய கூடாது என்றும், தனது குடும்ப பிரச்சனையில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது என ஹரி நாடார் சிறையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவி ஷாலினியுடன் வாழ விருப்பம் இல்லாததால்தான் மஞ்சுவை காதலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பண மோசடி வழக்கில்  ஹரி நாடார் கைதாகி ஒறுபுறம் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், வெளியில் அவரது காதலி மஞ்சுவும், மனைவி ஷாலினியும் ஹரி நாடார் யாருக்கு சொந்தம் என கேட்டு யுத்தம் நடத்தி வருகின்றனர். ஹரி நாடாருக்காக ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தும், ஆபாசமான  வார்த்தைகளால் பேசிக் கொள்ளும் ஆடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கழுத்தில் சரம் சரமாக தங்கச் சங்கிலி, ஆடி பென்ஸ் என விதவிதமான கார்கள், எப்போதும் உடன் நான்கைந்து அடியாட்கள், தானும் அரசியல்வாதிதான் என சொல்லிக்கொள்ள ஒரு கட்சியென பந்தாவாக வலம் வந்த பனங்காட்டு படை ஹரி நாடாரின் வண்டவாளத்தை அவரது மனைவியும் காதலியும் மாறிமாறி பேட்டிக் கொடுத்து தண்டவாளம் ஏற்றி வருகின்றனர்.

Latest Videos

ஹரிநாடாரின் பயங்கர காதல், கசமுசா விவகாரம் தொடர்பாக அவரது காதலி மஞ்சு கொடுத்துவரும் பேட்டி, தன்னை எப்போதும் ஒழுக்க சீலராக காட்டிக் கொண்ட ஹரி நாடாரின் மானத்தை கப்பல்  ஏற்றி வருகிறது. கடந்த சில வாரமாக இந்த களேபரங்கள் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும்ஷாலினி- மஞ்சு மோதல் வெடித்துள்ளது.  இருவரும் தொலைபேசியில் மோசமாக ஒருவரையொருவர் வசைபாடும் ஆடியோக்கள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கசிய தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹரி நாடார் தன்னுடன் படுக்கை அறையில் இருந்த புகைப்படத்தை மஞ்சு அவரின் மனைவிக்கே அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஹரிநாடாரை பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார் என ராக்கெட் ராஜா அறிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சிறையில் இருந்த தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசி இருப்பதாவது. ஷாலினி என்பவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை, பிடிக்காததால்தான் மஞ்சுவை காதலிக்க ஆரம்பித்தேன், மஞ்சுவுடன் சேர்ந்து வாழ்வது எனது குடும்பத்தில் இருக்கிற எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் முதல் மனைவி ஷாலினி தேவையில்லாத பொய் புகார்களை கொடுத்து வருகிறார். இதேபோல் பனங்காட்டு படை கட்சி சார்பாக தேவையில்லாமல் பொய் புகார்கள் கொடுக்கப்படுகிறது. நான் என்னுடைய மனப்பூர்வமாக மஞ்சுவுடன் வாழ்கிறேன் அவர் என்னை கட்டாயப்படுத்தவில்லை, அவர் என்னை மிரட்டவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் மஞ்சுவும் கணவன்-மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மஞ்சுதான் என் மனைவி, அதேபோல் பனங்காட்டு படை கட்சியில் இருந்து என்னை ராக்கெட் ராஜா நீக்கியிருக்கிறார் நான் என்னுடைய தாய் தந்தைக்கு மேலாக அவரை பார்த்தேன்.

ஆனால் இப்போது அவர் தேவையில்லாமல் பல விஷயங்களில் தலையிடுகிறார். ஹரி நாடாராகிய நான் யாருடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது  எனது தனிப்பட்ட உரிமை.அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். அதை ராக்கெட்ராஜா முடிவு செய்யக்கூடாது. எனக்கும் என் மனைவி ஷாலினிக்கும் என்ன கருத்து வேறுபாடு என்பது எங்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி ஹரி நாடாரின் மனைவி என என்னுடைய பெயரைக் கெடுப்பதற்காக ஷாலினி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதற்காக அவர் என்னுடைய மனைவி ஆகிவிட முடியாது. மனைவியாக இருக்க வேண்டிய நேரத்தில் மனைவியாக இருக்க தவறியதால்தான் நான் வேறொரு பெண்ணை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் என்னுடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினையை வைத்துக் கொண்டு என்னை எதற்காக ராக்கெட் ராஜா கட்சியிலிருந்து நீக்கினார் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் நாடார் சமுதாய மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகதான் நான் என்னுடைய உழைப்பில், சொந்த பணத்தில் அந்த கட்சியை உருவாக்கி அதற்கு ராக்கெட் ராஜாவை தலைவராக நான்தான் நியமித்தேன் என அவர் கூறியுள்ளார். 
 

click me!