21 மேயர் பதவியும் திமுகவுக்கே.? கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி பதவிகள்.? ஏமாற்றத்தில் காங், VCK.

Published : Mar 01, 2022, 05:48 PM ISTUpdated : Mar 01, 2022, 05:51 PM IST
21 மேயர் பதவியும் திமுகவுக்கே.? கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி பதவிகள்.? ஏமாற்றத்தில் காங், VCK.

சுருக்கம்

இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தையில் மேயர் பதவி எந்த கட்சிக்கும் கிடையாது என திமுக ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர் பதவி மற்றும் பேரூராட்சி, நகராட்சி பதவிகள் மட்டுமே வழங்கப்படும் என திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் துணை மேயர் ,நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி துணைத்தலைவர் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேருவின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே எஸ் அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகிய கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வருகின்ற 4ஆம் தேதி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே பதவியேற்பு நடைபெற உள்ள சூழ்நிலையில், நேரடியாக இன்றைய தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொத்தம் உள்ள 
21 மாநகராட்சிகளுக்கு 21 மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 138  நகராட்சி களுக்கான நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்தெடுகிக்க பட உள்ளனர். 489 பேரூராட்சி களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ஆனது 21 மாநகராட்சியையும் கைப்பற்றியது, மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை கைப்பற்றியது. 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆலோசனை கூட்டதிற்கு பிறகு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

திமுக உடனான உள்ளாட்சி பதவி இடங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாங்கள் கேட்டதையும் எங்களுக்கு போதுமான இடங்களையும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார். அதேபோல் எந்தெந்த இடங்கள் என்பதை திமுக நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என அவர் கூறினார். அவரையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக உடனான உள்ளாட்சி பதவி இடங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாங்கள் கேட்டதையும் எங்களுக்கு போதுமான இடங்களையும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த இடங்கள் என்பதை திமுக நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றார்.

இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தையில் மேயர் பதவி எந்த கட்சிக்கும் கிடையாது என திமுக ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர் பதவி மற்றும் பேரூராட்சி, நகராட்சி பதவிகள் மட்டுமே வழங்கப்படும் என திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கூட்டணி கட்சியினர் மேயர் பதவி கேட்டு சில இடங்களின் பட்டியலை கொடுத்திருந்த நிலையில் அதை திமுக தரப்பில் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது இதனால் கம்யூனிஸ்டு கட்சிகள் கொடுப்பதை கொடுங்கள் என அதற்கு ஒகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. ஆனால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்  தங்களுக்கு மேயர் பதிவியை கொடுத்தே ஆக வேண்டும் என முரண்டு பிடித்ததாகவும், ஆனால் எங்கள் தலைமை என்ன சொல்கிறதோ அதைதான் நான் சொல்கிறேன்.

மேயர் பதிவியை தவிர எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என கறாராக கே.என் நேரு கூற அவர்களும் வேறு வழி இல்லாமல் ஓ.கே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 21 மாநகராட்சிக்கும் திமுக மேயர்களே இருப்பர் என்றும், துணை மேயர் மற்றும் நகராட்சி பேரூராட்சி பதிவிகள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கும் ஓதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த பதவி என்பது குறித்து  நாளை திமுக அதாகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!