இந்தி படித்தால் பானிப்பூரிதான் விற்கனும்.. பாஜகவை எகிறி அடித்த பொன்முடி...!

By manimegalai aFirst Published Mar 1, 2022, 5:11 PM IST
Highlights

இந்தி மொழி திணிப்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்

தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் பயிற்று மொழி என திமுக உறுதியாக இருந்து வருகிறது. .  இந்தி திணிப்பை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அரசு கொள்கையாக உள்ளது. நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில்,அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு,மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, உக்ரைன் நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பை முடிக்காத மாணவர்கள் தமிழகத்தில் காலியாக இருக்க கூடிய இடங்களில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்மொழி உலகளாவிய தொடர்புக்கும்,  மேலும் கூடுதலாக ஆங்கில மொழி அறிவு இருந்தால் போதுமானது என தெரிவித்தார். இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் பானிபூரிதான் விற்கிறார்கள் என குறிப்பிட்டார்.   இந்தியை படிக்க வேண்டாம் என எப்போதும் தாங்கள் கூறவில்லையென தெரிவித்தவர்,  மூன்றாவது மொழியாக எந்த மொழி வேண்டும் என்றாலும் படிக்கலாம் என்றும் அதில் தவறில்லை என கூறினார். ஆனால் அதில்  இந்தி மொழி திணிப்பதைதான் நாங்கள் எதிர்ப்பதாகவும் தமிழகத்தில் இந்தி படித்தால் என்ன வேலை கிடைக்கும் எனவும் அப்போது கேள்வி எழுப்பினார்.

 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நுழைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் எதிர்கட்சியாக இருந்த போதும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையிலும் திமுக அதை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது மட்டுமின்றி நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் நீடித்து வருகிறது. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆளுநர் முதல்வர் மோதலாகவும் அது 
பரிணாமம்  அடைந்துள்ளது என்றே சொல்லாம். இந்நிலையில் மாநில அமைச்சர் பொன்முடி இந்தி படித்தவர்கள் பானிப்பூரிதான் விற்கிறார்கள் என கூறியிருப்பது பாஜகவிற்கு எதிரான  தாக்குதலாகவே கருதப்படுகிறது.

click me!