பன்வாரிலால் கதிதான் ரவிக்கும். போகும் இடமெல்லாம் DMK கருப்பு கொடி காட்டும்..கொளுத்திப் போடும் சவுக்கு சங்கர்.

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2022, 12:19 PM IST
Highlights

70 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று என பேசிய கட்சிதான் திமுக. மாநில சுயாட்சி பேசிய கட்சிதான் திமுக. அப்படிப்பட்ட கட்சியிடம் ஆளுடைய வைத்து நெருக்கடி கொடுத்தால் அந்தக் கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மொத்த த்தில் பிரச்சனை அதிகரித்து விட்டது. ஆளுநர் நியமிக்கப்பட்டபோதே திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என் ரவி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் பன்வாரிலால் புரோகித்திற்கு  ஏற்பட்ட அதே நிலைதான் இவருக்கும் ஏற்படும் என்றும். அவர் போகும் இடமெல்லாம் திமுக கருப்பு கொடி காட்டும் என அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் சங்கர் இவ்வாறு  கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எச்சரித்ததை போலவே ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.

தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்றும்,  முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கே ஆர்.என் ரவியை பாஜக நியமிக்கிறது என்றும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றாது தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக முதல்வரே நேரில் சென்று ஆளுநரை வரவேற்றார். 

அதைத்தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருந்துவந்தது. பாஜகவும் திமுக கூட்டணி கட்சிகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளுநர் தமிழக முதல்வரை மனம் திறந்து பாராட்டி வந்தார். அது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் ஆளுநர் விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே பட்டும்படாமலும் இருந்து வந்த முதலமைச்சர்  ஸ்டாலின், நீட் விவகாரத்தில் ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார் என்பதையும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் உறுதியாகவே இருந்து வருகிறார்.

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளாநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் காட்டமாக அறிக்கைவிட்டு தனது நிலைபாட்டை உறுதி செய்தார் ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ஆளுநர், பிறமாநில மாணவர்களைப் போல தமிழ்நாட்டு மாணவர்களும் பிற மொழியை பயில வேண்டும், நீட்டுக்கு முந்தைய காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை காட்டிலும் நீட் தேர்வுக்கு பின்னர் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற தொனியில் பேசினார். அவரின் இந்த பேச்சு கடும்  விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில்தான் ஆளுநரை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

இதேபோல் காந்தி நினைவு தினத்தன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு  பாஜகவுக்கும், ஆளுநரின் கருத்துக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.  ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும்  இடையே மோதல் வலுத்துவிட்டது என்பதை இது காட்டுவதாகவும் உள்ளது. இந்நிலையில்தான் இந்த மோதல் போக்கு குறித்து  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்துள்ளார். ஆளுநர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் பன்வாரிலால் புரோகித்துக்கு ஏற்பட்ட அதே நிலைதான் ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது :- 

ஆளுனர் பதவி என்பது ஒரு மரபுவழி பதவி, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட  சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் ஒருமுறை மட்டுமே திருப்பு அனுப்ப முடியும், மறுமுறை அப்படி செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. இரண்டாவது முறையும் அனுப்பும் பட்சத்தில் அதில் கையெழுத்து போடுவதை தவிர மற்ற அதிகாரம் அவருக்கு கிடையாது. மாநிலத்தில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் நிலையில், முடிந்தால் ஆளுநர் சில சந்தேகங்களை கேட்கலாம் அவ்வளவுதான் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் குடியரசு தினத்தன்று 8 பக்கத்திற்கு அறிக்கை வெளியிடுவது. இந்தியாவில் உள்ள அத்தனை கோடி மக்களின் மனதிலும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி குடியிருக்கிறார் என்று பேசுவது, புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசுவது, ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு பல்கலைக்கழகங்கள் intellectual debate நடத்தலாம் என உத்தரவு போடுவது.  மாநில அரசுகள் அனுப்பும் கோப்புகள் மீது விரைவான முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது, மாநில அரசு அனுப்பும் எந்த கோப்பையும் தேவையில்லாமல் தாமதம் செய்வது. அது குறித்து மாநில அரசு அதிகாரிகள் அணுகும்போது உரிய பதில் கூறாமல் அலட்சியம் காட்டுவது  போன்ற செயல்களில் ஆளுநர் ஈடுபடுவது எதேச்சதிகாரம்.

இப்படி ஆளுநர் நடந்து கொண்டால் ஒரு மாநில அரசு எப்படி செயல்பட முடியும்? இன்று இருக்கிற சட்ட சரத்துகள் அனைத்தும் அனைத்து கோப்புகளிலும் ஆளுநர் கையொப்பமிட வேண்டும் என்று உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் ஆளுநர் கோப்புகளில் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தினால் ஒரு மாநில அரசு எப்படி இயக்க முடியும்? முடிந்த அளவுக்கு ஆளுநருடன் ஒத்துழைத்து போகவேண்டும் என்றுதான் திமுக அரசு முயற்சி செய்கிறது. நீட் விவகாரம் திமுகவுக்கு  தன்மான பிரச்சினையாக மாறி இருக்கிறது. நீட் விவகாரத்தில் திமுக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் திமுகவின் இருமொழிக் கொள்கையிலும் உறுதியாக இருக்கும்போது மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆளுநர் பேசுவது திமுகவின் சீண்டும் வேலையே தவிர வேறொன்றுமில்லை. பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆளுநர்கள் அடக்கி வாசிப்பதும், பாஜக அல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அட்ராசிட்டி செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

70 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று என பேசிய கட்சிதான் திமுக. மாநில சுயாட்சி பேசிய கட்சிதான் திமுக. அப்படிப்பட்ட கட்சியிடம் ஆளுடைய வைத்து நெருக்கடி கொடுத்தால் அந்தக் கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மொத்த த்தில் பிரச்சனை அதிகரித்து விட்டது. ஆளுநர் நியமிக்கப்பட்டபோதே திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருப்பதால் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை அதனால் அமைதியாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து ஆளுநர் அரசு இயற்றும் தீர்மானங்களை நிறுத்தி வைப்பது கொப்புகளில் கையொப்பம் இடமாபல் காலம் தாழ்த்துவது போன்ற இடையூறுகளில் ஈடுபட்டால், ஆளுநர் பதிவிக்கு உரிய மரியாதையுடன் அவர் நடந்து கொள்ளவில்லை என்றால்,  நிச்சயம் திமுக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும். அவர் செல்லும் இடமெல்லாம் திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் நிலை எற்படும். அப்படி ஒரு சூழ்நிலையை ஆளுநர் உருவாக்கினால் அது அவருக்கு எதிராகவே முடியும்.  இவ்வாறு சங்கர் கூறினார்.
 

click me!