‘விஜய்யே சொன்னாலும் தி.மு.க.வுக்குதான் வேலை செய்வோம்..!’ தளபதிக்கே மெர்சல் காட்டிய மாவட்ட தலைவர்..

By Ganesh RamachandranFirst Published Feb 2, 2022, 11:50 AM IST
Highlights

ஏற்கனவே ‘தளபதி’ டைட்டிலை லவட்டியதால் கடுப்பில் இருந்தவர்கள், ஊரக உள்ளாட்சி வெற்றி ஜோரில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் வருவார்கள், அப்ப பார்த்துக்கலாம்! என்று பொறுமை காத்தனர்

தளபதி! எனும் பட்டத்தை ஸ்டாலினிடம் இருந்து கேட்காமல் கொள்ளாமல் தட்டிப் பறித்தார் விஜய். ஆனால் அது தாங்கள் ஆட்சியில் இல்லாத காலமாக இருந்ததால் கம்முன்னு இருந்தனர் தி.மு.க.வினர். ‘ஆட்சி வரட்டும் பார்த்துக்கலாம்’ என்று கடுப்பை பெண்டிங்கில் வைத்தனர். ஆட்சிக்கு வந்ததும் பல வேலைகளில் பிஸியாகினர்.

இந்நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, கணிசமான வெற்றியை பெற்றது விஜய்யின் மக்கள் இயக்கம்.  உடனே விஜய் ரசிகர்கள் ‘நாளைய முதல்வரே’ என்று விஜய்யை புகழ்ந்து போஸ்டர் ஒட்டினர். இதைப்பார்த்து டென்ஷனின் உச்சத்துக்குப் போனது தி.மு.க. ஏற்கனவே ‘தளபதி’ எனும் டைட்டிலை லவட்டியதால் கடுப்பில் இருந்தவர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்த ஜோரில் எப்படியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் வந்து நிற்பார்கள் அப்ப பார்த்துக்கலாம்! என்று மேலும் பொறுமை காத்தனர்.

ஊரக உள்ளாட்சி வெற்றியாளர்களுடன் விஜய்

நினைத்தபடியே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளிலும் இறங்கிவிட்டது  விஜய்யின் மக்கள் இயக்கம். விஜய்யின் அலுவலகத்தில் ஆலோசனைகளை நடத்தி, மளமளவென வேட்பாளர்களை முடிவு செய்ய துவங்கிவிட்டனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரான பில்லா ஜெகன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். மாறாக மாவட்டம் முழுவதும் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்கள். எங்களைப் பொறுத்தவரையில் தி.மு.க. வேறு, விஜய் மக்கள் இயக்கம் வேறு அல்ல.” என்று தெரிவித்திருக்கிறார்.

இது விஜய்யின் கவனத்துக்குப் போக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை கண்ட ஹீரோ போல் கொதித்துவிட்டார்.

விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளரான புஸ்ஸி ஆனந்தை வைத்து ஜெகனிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பலனில்லை. உடனே பில்லாவை இயக்கத்திலிருந்து நீக்கிவிட்டு, புதிய நபரை அதில் நியமித்து தேர்தலை சந்திக்கலாம்! என முடிவெடுத்தனர். ஆனால் இதை முன்கூட்டியே ஸ்மெல் பண்ணிவிட்ட பில்லா ஜெகன் ‘என்னை நீக்குனா, இந்த மாவட்டத்துல விஜய் மக்கள் இயக்கமே இருக்காது. விஜய்யே வந்து சொன்னாலும் கேட்க மாட்டோம்.’ என்கிற ரேஞ்சுக்கு தன் ஆதரவாளர்களை வைத்து தலைமைக்கு ஸீன் காட்டிவிட்டார். இதனால் புஸ்ஸி ஆனந்த் “தூத்துக்குடியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியில்லை என்று பில்லா ஜெகன் சொல்லியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. இயக்கத்தின் கருத்து இல்லை.” என்று நழுவிவிட்டார்.

விஜயுடன் புஸ்ஸி ஆனந்த்

ஆனாலும் அம்மாவட்டத்தின் மற்ற நிர்வாகிகளை வைத்து தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சிகளில் இயக்கத்தினரை நிறுத்தும் வேலையை துவங்கினர். ஆனால் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அப்போதுதான் புரிந்திருக்கிறது இதன் பின்னணியில் தி.மு.க. இருக்கிறது என்று. பில்லா ஜெகன் தி.மு.க.வில் இருந்தவர், இப்போதும் அவருக்கு அங்கே நெருக்கமிருக்கிறது. அந்த நெருக்கத்தை வைத்து, அவர் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை முடக்க தி.மு.க. செய்திருக்கும் மூவ்தான் இதெல்லாம் என்பது  விஜய் தரப்புக்கு புரிந்ததாம்.

இதைப்போலவே எல்லா மாவட்டங்களிலும் இப்படியான சித்து விளையாட்டை ஆளுங்கட்சி ஆடும் முடிவில் இருக்கிறதாம். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்துக்கு போகாமல் வீட்டில் முடங்கும் வேட்பாளர்கள், வேட்புமனுவை திரும்ப பெறும் வேட்பாளர்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவு திரட்டும் வேட்பாளர்கள் என்று விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களை வைத்தே விஜய்யின் கனவுகளை கலைக்கும் வேலைகளை ஆளுங்கட்சி துவங்கிவிட்டதாம்.

ஹும்….மற்றொரு விஜயகாந்தா?

click me!