
சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொது மக்களும் உடந்தையாக இருந்தது வேதனை அளிப்பதாகவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சென்னை ஆர்,கே,நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 21 ஆம் தேதி அங்கு தோதல் நடத்தப்பட்டது. அப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு தலா 6000 ரூபாய் கொடுத்ததாக புகார் எழுந்ததது.
இதே போல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டுக்கு 10000 ரூபாய் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இறுதியில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டி.டிவி.தினகரனின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி என திமுக குற்றம்சாட்டியிருந்ததது
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சனர் செய்துள்ளார். அதில் சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொது மக்களும் உடந்தையாக இருந்தது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.