"தினகரன் தான் அடுத்த முதல்வர்..." ட்விட்டரில் மீண்டும் மீண்டும் ஆதரவாக சு.சுவாமி !

 
Published : Jan 04, 2018, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
"தினகரன் தான் அடுத்த முதல்வர்..." ட்விட்டரில் மீண்டும் மீண்டும் ஆதரவாக சு.சுவாமி !

சுருக்கம்

TTVD May become CM Better unite soon

ஆர்.கே.நகர் MLA தினகரன் விரைவில் முதல்வராகக்கூடும் என்றும் அதிமுக அணிகளை இணைப்பது நல்லது என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, தினகரனுக்கு ஆதரவான கருத்துகளையே சமீப நாள்களாகத் தெரிவித்துவருகிறார்.  முதலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டபோது, “தமிழர்கள் அனைவரும் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதேபோல், “ஆர்.கே.நகர் வேட்பாளர்களில் பலர், நான் ஏன் பிறரைவிட ‘பாவியான’  தினகரனுக்கு முன்னுரிமை அளிக்கிறேன் எனக் கேட்கின்றனர். கடவுளான ராமர் ஏன் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்தார் எனப் படியுங்கள் என்று கூறினேன்” என்று தினகரனுக்கு ஆதரவளிப்பதற்கான விளக்கத்தை அளித்தார்.

பிறகு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், சுப்பிரமணியன் சுவாமிக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 7 MLAக்கள் பங்கேற்கவில்லை. செல்லூர் ராஜூ சபரிமலைக்கும், ஆறுக்குட்டி ஆஸ்பத்திரியிலும் இருப்பதால் வரமுடியவில்லை என சொன்னார்கள். மெஜாரிட்டிக்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 111 பேரின் ஆதரவு மட்டுமே அதிமுகவுக்கு உள்ளது. அதிலும் 7 பேர் வராதது அக்கட்சியின் தலைமை உச்சகட்ட அதிர்ச்சியில் உள்ளது.

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது; தற்போது நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் முடிவை வைத்து பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி அரசின் வீழ்ச்சி விரைவில் ஏற்படும் என்பது தெரிகிறது. தினகரன் முதல்வராக வாய்ப்புள்ளது. அதிமுக அணிகளை விரைவில் இணைப்பதே நன்று என்று தினகரனுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவையும் விடாமல் விமர்சித்து வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!