ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - திமுகவுக்கு பார்வார்டு பிளாக் ஆதரவு... 

 
Published : Nov 25, 2017, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - திமுகவுக்கு பார்வார்டு பிளாக் ஆதரவு... 

சுருக்கம்

RK Nagar is supporting the DMK in the by-elections according to All India Forest Block General Secretary P.Kathiravan.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.கதிரவன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓராண்டாக காலியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பிரதான கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்து வருகின்றன. 

திமுக சார்பில் கடந்த முறை வேட்பாளராக களமிறங்கிய மருது கணேஷ் இந்த முறையும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளராக மருது கணேஷை அறிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தோழமை கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.கதிரவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேட்டியளிக்கும்போது இதை தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!