
ஆர்.கே.நகர் இடத்தேர்தல் குறித்தும், திமுகவுக்கு ஆதரவு குறித்தும் இரட்டை இலை சின்னம் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் கூட்டத்தில் முடிவெடுத்து சொல்லுவேன் என கூறிவிட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ நழுவி சென்று விட்டார்.
நீண்ட இழுப்பறிகளுக்கு பிறகு வரும் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின்போது, எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனனும் திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
ஆனால் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா அதிகரிக்கவே தேர்தல் ஆணையம் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் பிசி ஆகிவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தான் ஒருவழியாக இரட்டை இலை பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
உடனே அடுத்த நாளே ஆர்.கே.நகர் தேர்தல் வேலைபாடுகளை கையில் எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இதனிடையே திமுக வேட்பாளராக சென்ற முறை வேட்பாளராக களமிறங்க இருந்த மருது கணேஷையே இந்த முறையும் ஸ்டாலின் திமுக தரப்பில் களமிறக்கியுள்ளார்.
திமுகவிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மற்ற கட்சியினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆர்கே நகர் இடை தேர்தலில் உங்கள் கட்சி சார்பாக நீங்கள் வேட்பாளரை அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய வைகோ, வருகின்ற 3ஆம் தேதி மதிமுக உயர்நிலை கூட்டம் தலைமை கழகத்தில் நடைபெறுகிறது எனவும் அதில் நாங்கள் இடை தேர்தல் குறித்து ஆலோசனை செய்து முடிவேடுப்போம் எனவும் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் பல மாத கணக்கில் இழுபறியாக இருந்தது. இதில் ஒருவருக்கொருவர் தங்களது நியாயத்தை கூறுகிறார்கள். உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பினர்.
அதற்கு இது உள்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை என வைகோ தெரிவித்து விட்டார்.
திமுக முன்பு நிறுத்திய வேட்பாளரைதான் இப்போதும் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிபீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, நடக்க இருக்கின்ற கூட்டத்தில் தான் இதுபற்றிய முடிவு எடுப்போம் என தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடத்தேர்தல் குறித்தும், திமுகவுக்கு ஆதரவு குறித்தும் இரட்டை இலை சின்னம் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் கூட்டத்தில் முடிவெடுத்து சொல்லுவேன் என கூறிவிட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ நழுவி சென்று விட்டார் என அங்கிருந்த செய்தியாளர்கள் முனகினர்.