ஆர்.கே.நகர் 89 கோடி பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு... தமிழக அரசின் பதிலால் அதிர்ந்து போன நீதிபதிகள்!

By vinoth kumarFirst Published Dec 3, 2018, 4:44 PM IST
Highlights

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகரில் முதல் முறையாக 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட தொடங்கினர். அப்போது ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் சோதனை நடைபெற்றது. பணப்பட்டுவாடா செய்ததற்காக ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக  வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கிலும் நீதிமன்றம் அரசிடம் அறிக்கை கோரியிருந்தது. அதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் பேரில், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த வழக்கானது சரியான ஆதாரம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கின் எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யுமாறு கோரி திருவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணபட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்த தகவலால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வில் நிலுவையிலுள்ள நிலையில் எப்படி ரத்தானது என்பது குறித்து பிற்பகலில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை சோதனை நடத்தி ஓராண்டான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

click me!