கொரோனாவால் மூளை பக்கவாதம் தாக்கும் அபாயம்.. அதிரவைக்கும் ஆய்வு முடிவு.

Published : Jan 31, 2022, 06:36 PM ISTUpdated : Jan 31, 2022, 06:37 PM IST
கொரோனாவால்  மூளை பக்கவாதம் தாக்கும் அபாயம்.. அதிரவைக்கும் ஆய்வு முடிவு.

சுருக்கம்

மூளை பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது..? கொரோனா தொற்று மூளையின் நரம்புகளைத் தாக்குகிறது. மூளையின் பலவீனமான நரம்புகளில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது அது வெடிக்கும் நிலை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், உடலில் சர்க்கரை அளவு போன்றவற்றைமுறையாக பராமரிக்க வேண்டும், அதற்காக எடுக்கும் மருந்துகளில் அலட்சியம் காட்டுவது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். 

கொரோனா மூன்றாவது அலையில் பலர் பக்கவாதத்தால் பாதிக்கும் நிலை இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா மூன்றாவது அறையில் மூளை பக்கவாதம் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. முதல் அலை மற்றும் இரண்டாவது அலையை காட்டிலும் 3வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வரும் இலையில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை  என்றாலும்கூட தொடர்ந்து நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அறையில் மூளை பக்கவாதம் ஏற்படும் பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். நோய் தொற்றுக்கு பின்னர் பலவீனமான மூளை நரம்புகள் பாதிக்கிறது அல்லது வெடிக்கிறது என்றும், இதனால் நோயாளிகள் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்படுகிறது என்றும்  மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பாட்னாவில் இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் IGIMS இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 15 நாட்களில் 42 பேருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் மூளை பக்கவாதம் போன்ற அறிகுறிகள் அப்போது தென்படவில்லை. ஆனால் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு பீகாரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாட்னாவில் பலர் ஐசியு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பல மூளைச்சாவு அடைந்த நோயாளிகள் படுக்கைகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் IGIMS மூளை பக்கவாத பாதிப்போரின் எண்ணிக்கை குறித்து ஆராய தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ஒரே நாளில் 8 பேர் புதிதாக மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் 35 நோயாளிகள் மூளை பக்கவாத நோயால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களே மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுகிறது. தொற்று காரணமாக மூளை நரம்புகள் அதிகளவில் பலவீனம் அடைந்து பின்னர் ரத்த அழுத்தத்தால் அது வெடித்து சிதறும் நிலை ஏற்படலாம் என மருத்துவமனையின் டாக்டர் மண்டல் தெரிவித்துள்ளார்.

பலர் தீவிர தொற்றுக்கு பிறகு மூளைச்சாவு அடைவதாகவும், பாட்னாவில் சேர்ந்த நரேஷ் பிரசாத் குப்தா என்பவர் மூளைச்சாவில் உயிரிழந்ததாகவும் பாட்னா எய்ம்ஸ் கொரோனா நோடல் டாக்டர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார். மூளைச்சாவு அடைந்த நாரேஷுக்கு கடுமையான தோற்று இருந்த்தாகவும், தற்போது இவ்வாறு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், மூளை பக்கவாத நோயாளிகளுக்கு ஐசியு படுக்கைகள் அதிக அளவில் தேவைப்படுகிறது என்றும், இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மருத்துவமனையில் படுக்கைகள் பெரிய பிரச்சினையாக மாறி விடும் என்றும் எச்சரித்துள்ளார். 

மூளை பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது..? கொரோனா தொற்று மூளையின் நரம்புகளைத் தாக்குகிறது. மூளையின் பலவீனமான நரம்புகளில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது அது வெடிக்கும் நிலை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், உடலில் சர்க்கரை அளவு போன்றவற்றைமுறையாக பராமரிக்க வேண்டும், அதற்காக எடுக்கும் மருந்துகளில் அலட்சியம் காட்டுவது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். பெரும்பாலும் கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். இதன் காரணமாக ஆபத்து அதிகரிக்கிறது. பாட்னாவில் உள்ள நியூரோ பிசிஷியன் சமய் நியூரோ மருத்துவமனையின் எம்டி டாக்டர் அகிலேஷ் குமார் சிங் ஆகியோர் கூறுகையில், கொரோனாவால் நரம்புகள் தொடர்பான பிரச்சினை வேகமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் நோய்த் தொற்றில் இருந்து மீண்ட பிறகு நோயாளிகள் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது.

ஏற்கனவே நரம்பு பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் இதற்கு எளிதாக ஆட்படுகின்றனர். எனவே கொரோனாவுக்கு பிறகும் மக்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் கொரோனா பக்க விளைவுகளை குறைக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!