கிடுகிடுவென உயரும் பாதிப்பு... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.73 லட்சமாக அதிகரிப்பு..!

Published : Apr 19, 2021, 10:48 AM IST
கிடுகிடுவென உயரும் பாதிப்பு... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.73 லட்சமாக அதிகரிப்பு..!

சுருக்கம்

 கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 19,29,329 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 19,29,329 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!