பாஜகவின் சேவை மனப்பான்மையை மக்களுக்கு காட்டுங்கள்.. தொண்டர்களுக்கு எல். முருகன் அழைப்பு..

By Ezhilarasan BabuFirst Published Apr 19, 2021, 10:48 AM IST
Highlights

களத்தில் மக்களோடு  நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம். இடையில்   தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் வேகமெடுத்து மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.  

மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் கொரோனா உதவி மையம் ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: கொரோனா முதல் அலைவரிசை பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகச் சிறப்பாக பணியாற்றியதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உணவு வழங்குதல், முக கவசம் வழங்குதல், மோடி கிட்  என்று சொல்லக்கூடிய உணவு பொருட்கள் வழங்குதல், ஆங்காங்கே மோடி கிச்சன் அமைக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு தயாரித்து வழங்குதல், போன்ற பல்வேறு பணிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றினோம். 

களத்தில் மக்களோடு  நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம். இடையில்   தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் வேகமெடுத்து மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் பல முக்கிய கடமைகளை நாம் ஆற்ற வேண்டி இருக்கிறது.1. தடுப்பூசி போடுவதற்கு வழிகாட்டுவது 2 .கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்குவது 3. வழிகாட்டு உதவி மையங்கள் அமைப்பது 4. பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுவது. 5 .அனைவருக்கும் முக கவசங்களை வழங்குவது என முக்கியமான பணிகளில் மக்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டுகிறேன். 

பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களின் சேவை மனப்பான்மையை மீண்டும் மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுகிறேன். பாரதப் பிரதமர் அவர்கள்  பாதிப்பிலிருந்து நம் நாடு முற்றிலும் விடுபட பல்வேறு பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும் வகையில் அனைவரும் அரசியல்  வேறுபாடுகளை கடந்து இணைந்து செயல்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுவதுமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று குறைந்திட ஒவ்வொருவரும் ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

click me!