பெருகிய வெள்ளம், உருகிய வெல்லம், கருகிய கொலுசு, பாடை கட்டிய புளி.. திமுகவை குண்டக்கமண்டக்க தாக்கிய ஹெச்.ராஜா!

Published : Feb 21, 2022, 07:11 AM IST
பெருகிய வெள்ளம், உருகிய வெல்லம், கருகிய கொலுசு, பாடை கட்டிய புளி.. திமுகவை குண்டக்கமண்டக்க தாக்கிய ஹெச்.ராஜா!

சுருக்கம்

மிளகாய் பொடியென்று மக்கள் தலையில் அரைத்துக் கொடுத்த கோலப் பொடியும், அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும், தில்லு முல்லு கழகத்தின் கதை முடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் காத்திரு பகையே என்று திமுகவை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மா நகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நேற்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 அன்று எண்ணடப்பட உள்ளன. இதற்கிடையே நாளை 5 வார்டுகளிள் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக கடைசி நேரத்தில் விலகியது. கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தனித்து போட்டியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன்மூலம் 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக  தனித்து போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக வெற்றி பெறும் என்றும் வாக்கு சதவீதம் உயரும் என்றும் பாஜக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தலில் ஆளும் திமுகவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கிடையே தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், ஹெச்.ராஜா மீண்டும் திமுகவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

அதில், பெருகிய வெள்ளமும், உருகிய வெல்லமும், கருகிய கால் கொலுசும், பல்லிக்குப் பாடை கட்டிய புளியும், குறுமிளகு என்று சொல்லிக் கொடுத்த பப்பாளி விதைகளும், மிளகாய் பொடியென்று மக்கள் தலையில் அரைத்துக் கொடுத்த கோலப் பொடியும், அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும், தில்லு முல்லு கழகத்தின் கதை முடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன... காத்திரு பகையே என்று காட்டமாக விமர்சித்து ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!