இன்று மீண்டும் அப்போல்லோ வருகிறார் ரிச்சர்ட் பேல் - திட்டமிட்டபடி 7ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆவாரா முதல்வர்???

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 01:24 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இன்று மீண்டும் அப்போல்லோ வருகிறார் ரிச்சர்ட் பேல் - திட்டமிட்டபடி 7ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆவாரா முதல்வர்???

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டு ஜான் பீயெல் மூன்றாவது முறையாக இன்று சென்னை வருகிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றநனர். கடந்த 30 ஆம் தேதி சென்னை வந்த ரிச்சர்ட் பீயெல், முதலமைச்சருக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வந்தார். 

இம்மாதம் 5 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சையின் பயனாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோதெரபி நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கட்சி தொண்டர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் யாகங்கள், பாலாபிஷேகம், விளக்கு பூஜை, சிறப்பு பூஜைகள், அன்னதானம் என தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதேபோல் தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியவைகறில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மற்றும் மூன்னாள் அமைச்சர்கள் என அனைவரும், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்புவார் என அவ்வப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2 முறை சென்னை வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டு பியெல் இன்று மீண்டும் சென்னை வருகிறார். அப்போலோ மருத்துவமனை செல்லும் அவர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொள்வார் என மருத்துவ வட்டார தகவல் தெரிவிக்கிறது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!