தனக்கு எதிராக தீர்மானம்... அதிமுகவுக்கு எதிரான அஸ்திரத்தை கையிலெடுத்த சசிகலா..!

Published : Jun 24, 2021, 12:21 PM IST
தனக்கு எதிராக தீர்மானம்... அதிமுகவுக்கு எதிரான அஸ்திரத்தை கையிலெடுத்த சசிகலா..!

சுருக்கம்

அமமுக வேட்பாளரை கூட கட்சியில் வைக்க முடியாதவர் அதிமுகவை எங்கே காப்பாற்றப் போகிறார் என சசிகலாவை பதிலுக்கு கிண்டலடித்து வருகின்றனர் அதிமுகவினர். 

அதிமுகவை தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர நலம் விசாரிப்பு என்ற பெயரில் சசிகலா பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். இவரை கண்டித்து அதிமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த ஐயப்பன் என்கிற அமமுகவை சேர்ந்த பிரமுகர் திமுகவிற்கு தாவினார். அமமுகவிலும் இல்லாமல், அதிமுகவிலும் இல்லாமல் தாவியதை சசிகலா தரப்பு எதிர்பார்க்கவே இல்லையாம்.

இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். இவரது தாவல் சசிகலாவின் ஆசையை அசைத்துப்  பார்த்துள்ளதாம். அமமுக வேட்பாளரை கூட கட்சியில் வைக்க முடியாதவர் அதிமுகவை எங்கே காப்பாற்றப் போகிறார் என சசிகலாவை பதிலுக்கு கிண்டலடித்து வருகின்றனர் அதிமுகவினர்.

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் கூட்டம் நடத்தி, சசிகலாவுக்கு எதிர்ப்பு உட்பட 7 தீர்மானம் நிறைவேற்ற வேண்டி இருக்கிறார்கள். இதுதான் நேரம் எனக்கருதிய  சில அதிமுகவினர் ‘சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் போடுறது சரி, பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும்  நிறைவேற்றுங்கள்’என 90 சதவீத நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு குரல்  எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?