குடும்பம் குடும்பமாக வெளியூர் சென்ற சென்னை வாசிகள்.. வெறிச்சோடிய கடை வீதிகள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2021, 3:04 PM IST
Highlights

இந்நிலையில் புரைவாக்கத்தில் மட்டும் மக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. புரசைவாக்கத்தில் 40 கண்காணிப்பு கேமராக்கள்,5 உயர் மட்ட  கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பாக பொருட்களை வாங்கி செல்ல சாதரன உடையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் சென்னை புரசைவாக்கத்தில் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக  மக்கள் கூட்டமாக குறைவாகவே காணப்பட்டது. பண்டிகைகாலங்களில் ஆடைகள்,வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக சென்னை தி.நகர்,புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்வர், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தீபாவளிக்கான புத்தாடை,பட்டாசு,பலகாரங்கள் விற்பனை சூடுப்பிடித்துள்ளது. 

இந்நிலையில் புரைவாக்கத்தில் மட்டும் மக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது, புரசைவாக்கத்தில் 40 கண்காணிப்பு கேமராக்கள்,5 உயர் மட்ட  கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பாக பொருட்களை வாங்கி செல்ல சாதரன உடையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுமட்டுமல்லாது செயின் பறிப்பு குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள காவல்துறை சார்பில் இலவசமாக கழுத்து பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகப் படும்படியான நபர்களை உடனடியாக புகைப்படம் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா என்பதை உறுதி செய்யும்  வகையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

மக்கள் தீபாவளி பண்டிகையை பத்திரமாகவும்,பாதுகாப்பாகவும் கொண்டாட மாநகராட்சி சார்பிலும் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். பண்டிகையின் இறுதி நாள் என்பதால் புத்தாடைகள் வாங்க வந்திருப்பதாகவும், மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்த நிலையில் குறைவாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.மேலும் கடந்த முறை தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் இந்த ஆண்டு கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினர். 

click me!