யார் வெற்றியை யாரு சொந்தம் கொண்டாடுவது.. திமுக எதிராக எரிமலையாய் வெடிக்கும் வி.பி.துரைசாமி..!

By vinoth kumarFirst Published Aug 2, 2021, 10:40 AM IST
Highlights

இந்த அறிவிப்பு, தேர்தல்களுக்காக வெளியிடப்பட்டதும் அல்ல. சமூக நீதி என்பது ஒருகட்சிக்கோ, ஒரு குடும்பத்தாருக்கோ மட்டுமே சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாஜக ஒருபோதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தது இல்லை. அது தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி;- பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, என்றைக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஓ.பி.சி. எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில், 27 சதவீதமும்; பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் தமிழக பாஜக நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதற்கு, மாணவர்கள் மீது கொண்ட அக்கறைதான் காரணம். பாஜக ஒருபோதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தது இல்லை. அது தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த அறிவிப்பு, தேர்தல்களுக்காக வெளியிடப்பட்டதும் அல்ல. சமூக நீதி என்பது ஒருகட்சிக்கோ, ஒரு குடும்பத்தாருக்கோ மட்டுமே சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆட்சி பொறுப்பேற்ற, 100 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று, 85 நாட்களாகியும், இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்து, தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை நிரூபிக்க வேண்டும் என  வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

click me!