அட கடவுளே.. 46 மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. 10 மாநிலங்களில் மக்கள் பீதி..

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 10:39 AM IST
Highlights

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, ஒரிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்து வருகிறது.

மீண்டும் கொரோனா வைரஸ் நாடு முழுதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக 10 மாநிலங்களில் அதன் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் பத்து சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலை முடிந்து இரண்டாவது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியதில்  ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அதேநேரத்தில் தொடர் ஊரடங்கு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது  அலை கட்டுக்குள் வருவதற்குள் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என ஐசிஎம்ஆர் தொடர்ந்து எச்சரித்து வந்தது, இந்த ஆண்டு இறுதியில் அதன் தாக்கம் இர்க்கும் எனவும் அது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நாடுமுழுவதும் 10 மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, ஒரிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கண்ட 10 மாநிலங்களில் சுமார் 46 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அம்மாநிலங்களில் நிலைமை மோசமடையும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அம்மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப் பிடித்தல் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கொரோனாவால்  உயிரிழப்போரில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் 45 வயதுக்கு மேற்பட்டோர்தான் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!