தமிழகத்தில் தட்டி தூக்கும் மூன்றாவது அலை.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி.

Published : Aug 02, 2021, 09:34 AM IST
தமிழகத்தில் தட்டி தூக்கும் மூன்றாவது அலை.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி.

சுருக்கம்

சென்னையில் 120ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது எனவே கொரோனா பாதிப்பு எந்த எந்த பகுதிகளில் உயர்ந்து உள்ளது என்பதை ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையிலும் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களை கண்டறிந்து சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அளித்த தகவல் அடிப்படையில் மட்டுமே 10 நாட்களுக்கு மீண்டும் கடைகளை மூடுவதற்கு உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.  

சென்னை மீன் மார்கெட் பகுதியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.சி.எம்.ஆர் வழங்கிய சீரோ சர்வே அடிப்படையில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். சென்னை ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களை அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சுகாதாரம் எஸ்.மனிஷ் மற்றும் சென்னை மாநகராட்சி மத்திய பகுதியின் துணை ஆணையர் சரண்யா ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி: 

தமிழகத்தில் மூன்றாம் அலையின் பாதிப்பு தற்போது அதிகரித்து வர கூடிய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து இந்த வாரம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் 120ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது எனவே கொரோனா பாதிப்பு எந்த எந்த பகுதிகளில் உயர்ந்து உள்ளது என்பதை ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையிலும் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களை கண்டறிந்து சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அளித்த தகவல் அடிப்படையில் மட்டுமே 10 நாட்களுக்கு மீண்டும் கடைகளை மூடுவதற்கு உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது இறைச்சி மற்றும் மீன் மார்கெட் பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் மீன் மார்கெட் பகுதிகளில் மொத்த வியாபாரிகள் மட்டும் சென்று வாங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை செய்து முடித்த பின் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் ஐ.சி.எம்.ஆர் வழங்கிய சீரோ சர்வே அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!