சட்டப்பேரவையில் மு. கருணாநிதியின் திருவுருவப்படம். குடியரசுத்தலைவர் சென்னை வருகை. உ.பிக்கள் உற்சாகம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 10:00 AM IST
Highlights

அதன் தொடர்ச்சியாக சபாநாயகரும், நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்று முதல் 5 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகிறார். அதன்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை 9.50 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு பிற்பகல் 12.55 மணிக்கு வருகிறார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பல்வேறு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். குறிப்பாக, சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனை, நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அந்த விழாவிற்கு தலைமை தாங்கி விழாவினை நடத்திட வேண்டும் என்றும், அதேப்போல் சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக சபாநாயகரும், நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்று முதல் 5 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகிறார். அதன்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை 9.50 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு பிற்பகல் 12.55 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அவர், மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சாலை மார்க்கமாக தலைமை செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். 

 

மேலும், இந்த விழாவில் தமிழக ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் உரையாற்றுகின்றனர். விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் பங்கேற்க திராவிடர் கழகத்  தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு  சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் நேரில் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர். 

அதேப்போல், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதியின் படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரிசோதனை கட்டாயம். கொரோனா நோய்த் தொற்று காலம் என்பதால்,  இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் அனைவரும்  அடையாள அட்டை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். விழாவுக்கு வரும் அனைவரும் அழைப்பிதழை எடுத்து வர வேண்டும் என்றும், விழா முடியும் வரை அழைப்பிதழை வைத்திருக்க  வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாலை 4 மணிக்குள் அவரவருக்கான இருக்கையில் அமர வேண்டுமென்று வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது. 

சட்டசபையில் கலைஞர் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் இன்று இரவு கிண்டி ஆளுநீர் மாளிகையில் தங்கும் குடியரசுத்தலைவர், நாளை 3ம் காலை விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்லும் அவர், 4ம் தேதி வெல்லிங்டன் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 5ம் தேதி ஓய்வெடுக்கும் அவர், 6ம் தேதி காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!