அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி.. செ.கு.தமிழரசன் தமிழக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2021, 2:12 PM IST
Highlights

இடைக்கால சபாநாயகராகவும் பதவி வகித்தார். அடுத்துவந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக இந்திய குடியரசு கட்சியின் தலைவர்  செ.கு.தமிழரசன் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய குடியரசு கட்சி அங்கம் வகித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்ட செ.கு.தமிழரசன், வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானர். 

 

இடைக்கால சபாநாயகராகவும் பதவி வகித்தார். அடுத்துவந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கமணியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று மாலைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு அவருக்கு ஒரு தொகுதி அதிமுக கூட்டணியில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல, தமிழக முதலமைச்சருடன் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்திப்பு நனைபெற உள்ளது. ஏற்கனவே பா.ஜ.கவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.  

 

click me!