160-170 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் திமுக கூட்டணி..! தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகள்

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 7:22 PM IST
Highlights

ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் 160-170 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி ஒரேகட்டமாக நடந்தது. வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருந்தாலும், வழக்கம்போலவே திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே தான் உண்மையான போட்டி.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்த சட்டமன்ற தேர்தலில், இன்றுதான் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. எனவே தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகின்றன.

ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திமுக கூட்டணி தமிழகத்தில் 160-170 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி 58-68 தொகுதிகளிலும், அமமுக கூட்டணி 4-6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒரு தொகுதிகளில் கூட வெல்லாது என்றும் ரிபப்ளிக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 

click me!