நடப்புக்கணக்கில் பணம் எடுக்கும் வரம்பு நீக்கம் - தேர்தல் ஆணைய மிரட்டலுக்கு பணிந்ததா ரிசர்வ் வங்கி? 

First Published Jan 30, 2017, 10:23 PM IST
Highlights


ஏ.டி.எம்.களில் இருந்தும் , நடப்புக் கணக்குகளில் இருந்து வங்கியில் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தேர்தல் ஆணைய மிரட்டலுக்கு பணிந்து இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.


உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்க கூறி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடலாம் எனத் தெரிகிறது.


நடப்புக்கணக்கில் வரம்பு நீக்க அறிவிப்பு காரணமாக 5 மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக நடப்பு கணக்கு தொடங்க அறிவுறுத்தப்படுவார்கள்.


ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு காரணமாக வங்கியில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து இருந்தது. வாரத்துக்கு தனிநபர் ஒருவர்  வங்கியில் இருந்து ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.


இந்நிலையில், 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி, வேட்பாளர்கள் வாரத்துக்கு ரூ.2 லட்சம் வரை வங்கியில் இருந்து  பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரம் புதன்கிழமை கடிதம் எழுதியது.


ஆனால், அதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்து விட்டது. ஆனால், தேர்தல் சூழலைக் கருத்தில் கொண்டும், வேட்பாளர்கள் செலவுக்காக கூடுதல்  பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் சூழலை உணர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அனுமதியை அளிக்க வேண்டும்.


 தேர்தலை சுமூகமாக நடத்தவும், வேட்பாளர்களுக்கு போதுமான பணம் செலவு செய்ய அனுமதிக்கவும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு ரிசர்வ் வங்கி பணிய வேண்டும் என்று 2-வது முறையாக தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியது.


இதையடுத்து, நாளை முதல் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகளை நீக்கியும், நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை நீக்கியும் ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது.


ஆதலால், 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கினால், அதில் இருந்து ரூ.24 ஆயிரம் மட்டுமே வாரத்துக்கு எடுக்க முடியும் என்பதால், உடனடியாக தேர்தல் செலவு என்ற பெயரில், நடப்புக்கணக்கு தொடங்கி, குறிப்பிட்ட அளவு செலவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதற்கான உத்தரவை விரைவில் பிறப்பிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் வேட்பளார் ஒருவர் ரூ.28 லட்சம் வரையிலும், கோவா, மணிப்பூரில் வேட்பாளர் ஒருவர் ரூ.20 லட்சம் வரையிலும் தேர்தல் செலவு செய்ய அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

click me!