திமுகவை கோவலப்படுத்திய கிறிஸ்தவ பாதிரியாருக்கு இதுதான் கதி.. ஸ்கெட் போட்டு தூக்கியது போலீஸ்..

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2021, 10:34 AM IST
Highlights

ஜார்ஜ் பொன்னையா பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்றும்,  அதனால்தான் அவர் திமுகவை மோசமாக விமர்சிக்கிறார்கள் என்றும் திமுகவினர் மீம்ஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்தனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்து மதத்திற்கு எதிராகவும், தலைவர்களை அவமானப்படுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையில் அவர் பேச்சு உள்ளதாகவும் கூறி, அவரை கைது செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய தேசத்தில், நாளடைவில் மத பூசல்களும் துவேஷங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என  ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்து பூசல் எழுப்பும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அந்த வகையில் இந்து மதத்தை குறித்து இழிவாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அதிடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையைச் சேர்ந்தவர் சர்ச் பாதர் ஜார்ஜ் பொன்னையா.  இவர் அப்பகுதியில் சர்ச் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல் அவர் பிரார்த்தனை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதை கண்டித்து அவர் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, கிறிஸ்துவ இயக்கம், முஸ்லிம் அமைப்பு  பிரதிநிதிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய ஜார்ஜ் பொன்னையா, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களுமாகிய சிறுபான்மையின மக்கள் வாக்களித்ததால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை எனக்கூறி விமர்சித்தார். அதேபோல பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரை மிக மோசமாகவும் இழிவாகவும் விமர்சித்து பேசினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதையடுத்து திமுகவை விமர்சித்த ஜார்ஜ் பொன்னையா வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் திமுகவினர் பதிலடி கொடுக்கும் வகையில்  அவரை விமர்சித்து வந்தனர். 

ஜார்ஜ் பொன்னையா பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்றும்,  அதனால்தான் அவர் திமுகவை மோசமாக விமர்சிக்கிறார்கள் என்றும் திமுகவினர் மீம்ஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்தனர். இதற்கிடையில் பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாதிரியாரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினரும் தமிழகம் முழுதும் போராட்டம் அறிவித்தனர். பல தரப்பில் இருந்தும் பாதிரியாருக்கு எதிர்ப்புகள் எழுந்தது. இதன் அடிப்படையில் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கைதுக்கு பயந்து அவர் சென்னைக்கு காரில் தப்பி ஓடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுரை பாண்டி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரில் தப்ப முயன்ற பாதிரியாரை மடக்கி கைது செய்தனர். இந்நிலையில் அவர் கன்னியாகுமரி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளார். அவர் சென்னை சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிக்க  திட்டமிட்டு இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 

 

click me!