பாஜகவின் ஸ்லீப்பர் செல்லா.? திமுகவின் எதிரியா.? மதத்துவேச பாதருக்கு எதிராக 38 மாவட்டத்திலும் பாஜக போராட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2021, 8:14 AM IST
Highlights

ஆனால் இவர் திமுகவை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். திமுக தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். திமுக ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் இந்த ஜார்ஜ் பொன்னையாவை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சட்டவிரோதமாக பேசியுள்ள ஜார்ஜ் பொன்னையா என்பவரை கைது செய்திட வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தலைமையில் தமிழக அரசை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்  இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள். 

தேச ஒற்றுமைக்கு எதிராகவும் உயர்பதவியில் இருக்கக்கூடிய தலைவர்களை மிகமிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து பேசியிருப்பது மனசாட்சி உள்ள எவரும் மன்னிக்க முடியாதது. சமூக ஊடங்களில் சிறிய பதிவுகளை போடுபவர்களை கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடிய தமிழக அரசு பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது மிகவும் வேடிக்கையானது. 
ஏற்கனவே பொன்னையா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. 

பொது அமைதிக்கும் மக்களிடையே இருக்கக்கூடிய சமூக, சமத்துவ ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டத்தில் பேசுகிறேன் என்று சொல்லி விஷத்தை கக்கி இருக்கிற பொன்னையாவை கண்டித்தும், அவரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். பேசியது தேச விரோத செயல் என்று தெரிந்தும் கைது செய்யவில்லை என்றால் இவரை பேச வைத்தது திமுக தான் என்ற முடிவுக்கு வரவேண்டியது இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவர் திமுகவை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். திமுக தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். திமுக ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் இந்த ஜார்ஜ் பொன்னையாவை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். ஜார்ஜ் பொன்னையா பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்றும், அதனால்தான் அவர் திமுகவை இழிவாக பேசுகிறார் என்றும் மீமிஸ்கள் பறக்கின்றன. மொத்தத்தில் ஜார்ஜ் பொன்னையாவின் பின்னணி குறித்து வரும் தகவல்கள் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளையும் குழப்பி வருகிறது.. யாருய்யா இந்த பொன்னையா என பலரும் அவரின் பின்னணியை ஆராய தொடங்கியுள்ளனர். 
 

click me!