சென்னையில் பெய்த மழையால் 2 பேர் உயிரிழப்பு... மாலைக்குள் குடும்பத்திற்கு நிவாரணம்... கே.என்.நேரு உறுதி!!

By Narendran S  |  First Published Nov 2, 2022, 6:55 PM IST

சென்னையில் பெய்த மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். 


சென்னையில் பெய்த மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். வடக்கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனிடையே பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: தத்தளிக்கும் சென்னை!! கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் விடுத்த கோரிக்கை

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் மழையால் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு மாலைக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து பணிகள் நடைபெற்று வருகிறது. 20.5 செ.மீ மழை பெய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம். புளியந்தோப்பு, திருவிக நகர், கொளத்தூர் என சில இடங்களில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

450 மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருந்தோம். 65 இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 16 சுரங்க பாதைகள் பராமரிப்பு பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்; 3 சுரங்கப்பாபதையில் மழைநீர் தேங்கியுள்ளது. விரைந்து வெளியேற்றப்படும். சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரண காசோலை வழங்கப்படும். மழை பாதித்த பகுதிகளில் இல்லம் நோக்கி உணவு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கு முகாம்களும் தயாராக உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 வார்டுகளிலும் நவ 5ம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!