அதிமுகவின் ஆட்சியில் தமிழ்நாடே சீரழிப்பு..! அதை சரி செய்ய ரொம்ப வருஷம் ஆகும்.?- மு.க.ஸ்டாலின்

Published : Nov 02, 2022, 03:21 PM ISTUpdated : Nov 02, 2022, 03:24 PM IST
அதிமுகவின் ஆட்சியில் தமிழ்நாடே சீரழிப்பு..! அதை சரி செய்ய ரொம்ப வருஷம் ஆகும்.?- மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள் அதை சரி செய்ய வேண்டுமென்றால் ரொம்ப வருஷம் ஆகும் இருந்தாலும் நாங்கள் ஒன்றரை வருடத்திற்குள் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

மழை பாதிப்பு- முதலமைச்சர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வட் சென்னையில் தேங்கியுள்ள பணியை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மழை பாதிப்பு தொடர்பாக  சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது பாதிப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை வீடியோ கால் மூலம் கேட்டறிந்தார். 

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை தொடருமா..? வெதர் அப்டேட்

தமிழகத்தை சீரழித்த அதிமுக

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மழை பாதிப்பு தொடர்பாகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கினார்.

கேள்வி: வட சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாக உங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறதா?

முதலமைச்சர் பதில்: வந்திருக்கிறது. அதை அப்போதைக்கப்போது அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

கேள்வி: போன முறை இல்லாத அளவுக்கு தண்ணீர் எங்கேயும் பெரிய அளவில் இல்லை.

 முதலமைச்சர் பதில்: நான் சொல்லக் கூடாது அதை. நீங்கள் சொல்கிறீர்கள்.

கேள்வி: தி.நகர் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் இருக்கிறது. அதையும் சரி செய்ய.....

 முதலமைச்சர் பதில்: அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள் அதை சரி செய்ய வேண்டுமென்றால் ரொம்ப வருஷம் ஆகும்.  இருந்தாலும் நாங்கள் ஒன்றரை வருடத்திற்குள் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதையும் படியுங்கள்

வெள்ளக்காடாய் சென்னை..! 90% பணிகள் முடிந்ததாக கூறும் திமுக..! 40% பணிகள் கூட முடிவடையவில்லை- ஆர்.பி. உதயகுமார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!