ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க தடை... தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 12, 2020, 3:23 PM IST
Highlights

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம். அரசின் தடை உத்தரவை மீறி நிவாரணப் பொருட்கள் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் நேரக்கட்டுப்பாட்டுடன் வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவு காரணமாக வேலைக்கு செல்லாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.1000 மற்றும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் தமிழக அரசு வழங்கியது.  மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம். அரசின் தடை உத்தரவை மீறி நிவாரணப் பொருட்கள் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற  மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை வழங்கலாம்.  சில நபர்கள், கட்சி, கட்சியினர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயல்.   சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

click me!