செக்கச் சிவந்த ஜெயலலிதாவும், இனிப்பு தூக்கலான பூசணிக்காய் அல்வாவும்: போயஸ் கார்டன் கலகல நவராத்திரி நினைவலைகள்.

By Vishnu PriyaFirst Published Sep 30, 2019, 3:44 PM IST
Highlights

அடிச்சுப் பிடிச்சு வாங்கி சாப்பிடுவோம் அதை.” என்கிறார் போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றிய ஒரு சீனியர். 

ஜெயலலிதா மிகப் பெரிய பக்திமான்! என்பது தேசமறிந்த விஷயம். பரம்பரை ரீதியில் அவர் பெருமாளின் பக்தை என்றாலும், பெண் தெய்வங்களை மிக சிரத்தையாகவும், தீவிரமாகவும் வணங்கக்கூடியவர். இந்த விஷயம், நவராத்திரி காலங்களில் நச்சுன்னு வெளிப்படும். நவராத்திரி நாட்கள் வந்துவிட்டாலே செம்ம குஷியாகிடுவார் ஜெயலலிதா. ஒன்பது நாட்களும் போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் கொழு வைக்கப்படும். மாலையில் நடக்கும் பூஜைக்காக குளித்து முடித்து, செக்கச் சிவந்த தன் முகத்தில் தீர்க்கமாக நாமம் இட்டு, தகதக தங்கத்தாரகையாக போயஸ்கார்டன் இல்லத்தின் வாசல் வரை வந்து சாமி கும்பிடுவார் ஜெலலிதா. ‘அம்மா இப்படி மாலையில் சர்வ லட்சணமா வெளியில் வந்து சாமி கும்பிடுறதை பார்க்கிறதுக்கே போயஸ் வீட்டு பணியாட்களும், செக்யூரிட்டி போலீஸும் போட்டி போடுவோம்.

கற்பூரத்தை வணங்குன பிறகு பல நாட்கள் அம்மா எங்க எல்லாரையும் பார்த்து புன்சிரிப்பா சிரிப்பாங்க. அப்புறம் எங்களுக்கும் கற்பூரம், விபூதி குங்குமம் தரச்சொல்லிட்டு, நவராத்திரி பலகராம் தரச்சொல்லுவாங்க. 
நவராத்திரி பூஜைக்காக அம்மா வீட்டுல பண்ணக்கூடிய ஸ்வீட்ஸ் அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். அதுலே அம்மாவுக்கு பிடிச்சது பூசணிக்காய் அல்வாதான். ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வித இனிப்பு வரும்.

அதில் பூசணிக்காய் அல்வா மட்டும் ரெண்டு நாட்கள் பட்டியல்ல வந்துடும். ரெண்டு வித பூசணிக்காய் அல்வாவாக இருக்கும்.அடிச்சுப் பிடிச்சு வாங்கி சாப்பிடுவோம் அதை.” என்கிறார் போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றிய ஒரு சீனியர். 


உண்மைதான் ஜெயலலிதாவுக்கு நவராத்திரி என்றால் கொள்ளைப் பிரியம். நவராத்திரி நாட்களைக் கணக்கிட்டே தன் பயணத்தை முடிவு செய்வார்.  
போயஸ் இல்லத்தில் மட்டுமில்லை, கோடநாடு பங்களாவில் நவராத்திரி காலங்களில் இருந்தாலும் அங்கேயும் கொழு வைக்கப்படும். மாலையில் அந்த குளிரிலும் குளித்து முடித்து, நெற்றில் துலங்க திலகமிட்டு, குளிருக்கு இதமாக ஒரு சால்வையை போற்றிக் கொண்டு ஜெயலலிதா அமர, கொழு பூஜை துவங்கும். 
மனது ரொம்ப இதமாக இருந்தால், சில நேரங்களில்  ஜெயலலிதாவே அம்மன் பாடல்களைப் பாடுது உண்டு. உச்சஸ்தாயில் சிறு பிசிறுமின்றி, ஜெயலலிதா பாடுகையில், அவரது குரல் பங்களா தாண்டி வெளியே செக்யூரிட்டி போலீஸ் பகுதி வரை கேட்கும். 
ரம்மியமான குளிரில், ஜெயின் லைவ் பாடலிசையும் காற்றில் கலக்கையில் தங்களை அறியாமலே பக்திமயமாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள் காவல்துறை அதிகாரிகள். 
அம்மான்னா அம்மாதான்!

click me!