பிஜேபிக்கு எதிராக தமிழிசை மகனே கோஷங்கள் எழுப்பியது ஏன்? வெளியான அதிர்ச்சிப் பின்னணி...

By sathish kFirst Published Jun 10, 2019, 2:48 PM IST
Highlights

தமிழிசைக்கு எதிராக பலமுறை மீம்ஸ், உருவத்தை வைத்து கேலிச்சித்திரம் என தமிழிசைக்கு எதிராக வருவதைப்பார்த்த, அவரது மகன் பலமுறை சொல்லியும் கேட்க்காததால் இப்படி பொதுவெளியில், தனது எதிர்ப்பை காட்டியதாக தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செயதியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மகன் சுகநாதன் பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதை கண்டு அங்கு விரைந்த தமிழிசையின் பாதுகாவலர்கள் சுகநாதன்னை அடக்கி கோஷமிடுவதை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.தனக்கும் தன் மகனுக்கும் குடும்ப பிரச்னை இருப்பதாகவும் அதன் காரணமாகவே பொது இடத்தில் இப்படி கோஷம் எழுப்பியதாகவும் தமிழிசை கூறினார். 

தமிழிசை சமாளித்தார் என அரசியல் கட்சியினர் விமர்சனங்கள் எழுப்பினாலும் தமிழிசை சொல்வது உண்மை.  தமிழிசையின் மருமகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தனது மனைவியைக் கூட பார்க்க வராமால் இப்படி கட்சி கட்சி என குடும்பத்தை பொருட்படுத்தாமல் இருந்ததால் அவரது மகன் சுகநாதன் இப்படி அவருக்கு எதிராகவே கோஷம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் காரணமல்ல, தமிழிசைக்கு எதிராக பலமுறை மீம்ஸ், உருவத்தை வைத்து கேலிச்சித்திரம் என தமிழிசைக்கு எதிராக வருவதைப்பார்த்த, அவரது மகன் பலமுறை சொல்லியும் கேட்க்காததால் இப்படி பொதுவெளியில், தனது எதிர்ப்பை காட்டியதாக தெரிகிறது.
 
1999 கட்சியில் இணைந்த தமிழிசை, தென்சென்னை மருத்துவர் அணி செயலாளர், மாநில மருத்துவர் அணி செயலாளர், தென்னிந்திய மருத்துவர் அணி துணை செயலாளர், மாநில பொது செயலாளர், மாநில துணை பிரெசிடெண்ட் , பிஜேபி தேசிய செயலாளர், தமிழக பாஜக தலைவர் என கட்சிக்காக பலவருஷமா உழைச்சும் ஒண்ணுமே பலனில்லை அதேபோல,  ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தோல்வி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் தோல்வி, வடசென்னை மக்களவை  தொகுதியில் தோல்வி, தூத்துக்குடி மக்களவை  தொகுதியில் தோல்வி என தொடர்ந்து பல அவமானங்களை சந்தித்துள்ளார்.

அதுமட்டுமா? கட்சிசெய்யும் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து, பாசிச பாஜக ஒழிக என்ற கோஷங்களுக்கெல்லாம் சண்டையிட்டு வக்காலத்து வாங்கி,  தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி, கேலிச்சித்திரங்கள், மீம்சுகள்,உருவத்தை கேலிப்பொருளாக்கி பேசுபவர்களை சமாளித்து, குடும்பத்தைக் கூட பொருட்படுத்தாமல் கட்சி வளர்த்து வந்தும் ஒரு பலனும் இல்லை. 

தமிழிசையின் கணவர் சௌந்தர்ராஜன் எப்போதும் பிஜேபி தான், இருந்தும் என்ன புண்ணியம்?  எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தார் சௌந்தர்ராஜன். ஆனால் அந்த பதவி "சுதா சேஷைய்யன்க்கு போய் சேர்ந்தது.

ஆனால், 2006 ஆம் ஆண்டு பிஜேபியில் இணைந்த நிர்மலா சீதாராமன், வியர்வை சிந்தாமல், வெய்யிலில் அலையாமல், வசை சொற்களை ஏற்காமல், வாத பிரதிவாதங்களுக்கு பதில் சொல்லாமல், மக்களின் சாபங்களை பெறாமல், தேர்தல் தோல்விகளை அடையாமல், தெருப்புழுதி மேனியில் படாமல், 2008 செய்தி தொடர்பாளர், 2014 ல் ஆந்திரா மூலம்  ராஜ்யசபா எம்பி,  தனி அமைச்சக அமைச்சர் (நிதி&கார்ப்ரேட் விவகாரம்), கர்நாடகா மூலம் ராஜ்யசபா எம்பி 2016,  காபினெட் அமைச்சர் 2017 பாதுகாப்புத்துறை அமைச்சர் இப்போ, நிதியமைச்சர்.

கட்சியில் சேர்ந்த குறைந்த காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சர்  என்ற உயர்நிலைக்கு நிர்மலாவால் போகமுடிகிறது என்றால், அதுவும் எந்த தேர்தலிலும் பங்கெடுக்காமல்,மக்களை சந்திக்காமல், ராஜ்யசபா எம்பி காபினெட் அமைச்சராக ஆகிறார். அதேபோல, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெற்றதும் தான். என்னதான், தகுதி திறமை படிப்பு உழைப்பு என அனைத்து தகுதிகளும் தமிழிசைக்கு இருந்தாலும்,  அவரால் மத்திய அரசில் ஒரு இணை அமைச்சர் பதவி கூட பெற முடியவில்லை இப்படி பல ஆதங்கம் தமிழிசை மகனின் மனதுக்குள் நீங்காத வலியாக இருந்துள்ளது.

என்ன செய்வது பிஜேபிக்கு தமிழிசை ஆற்றிய தொண்டு அளப்பரியது தான்...

click me!