தமிழர்களின் நிலையை உணர்ந்து வருத்தம்... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 10:38 AM IST
Highlights
ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. ஊரடங்கு கடைசி நாளான இன்று தமிழ் புத்தாண்டும் கூட, இந்நிலையில் இது குறித்து அவர், ‘’கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது; தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும். அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காக ஏப்.20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும் .கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். 

கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது.

சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிறைய பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாமல் வீட்டுக்குள் இருக்கிறீர்கள். 

அரசியல் சட்டத்தின் வலிமையை நிலைநாட்டுவது, அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை. இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது. உங்களுடைய ஒத்துழைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறது.
உங்கள் தியாகங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்'' என அவர் தெரிவித்தார். 
click me!