கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள்.. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கலாம்.. பிரதமர் மோடி..!

Published : Jan 31, 2022, 11:28 AM IST
கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள்.. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கலாம்.. பிரதமர் மோடி..!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் இது ஒரு முக்கியமான நேரம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. 

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் நாளை மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் இது ஒரு முக்கியமான நேரம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. 

மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை எம்.பி.க்கள் முன்னெடுக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டத்தொடருக்கு வரவேற்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்த மனதுடன் தங்களது கருத்தை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!