Singaravadivel : முன்னாள் காங்கிரஸ் எம்.பி காலமானார்.. தமிழக அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி !!!

By Raghupati R  |  First Published Jan 31, 2022, 10:09 AM IST

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் கொரோனாவால் உயிரிழந்தார். 


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல்  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு இன்று காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்றால்  பாதிக்கப்பட்ட அவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. எம்.பி எஸ்.சிங்காரவடிவேல்  மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

undefined

நேற்று முன்னாள் மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் ஈரோடு ஆவின் நிறுவனருமான எஸ் கே பரமசிவன் வயது முதிர்வால் உயிர் இழந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.கே பரமசிவன் ஈரோடு தொகுதியில் 1962-67 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.  இவர் ஈரோடு கூட்டுறவுச் சங்கம் மற்றும் ஈரோடு ஆவின் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.

இவர் பால் கூட்டுறவு சங்கம் மூலம் கொங்கு மண்டலத்தில் வெண்மைப் புரட்சியை உருவாக்கியவர். தற்போது 103 வயதாகும் இவர், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வந்து தனது கடமையை ஆற்றி உள்ளார்.   ஈரோட்டில் இவருடைய இடங்களில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  அவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு எஸ்.கே பரமசிவன் உயிர் இழந்தார்.  பரமசிவன் மறைவுக்கு ஈரோடு மற்றும் பெருந்துறை ஆகிய இடங்களில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.  நேற்று நடைபெற இருந்த மஞ்சள் ஏலமும் நிறுத்தப்பட்டது.  காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மதியம் அவரது உடல் அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

click me!