ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார்.. உதயநிதி கேவலமானவர்.. திமுகவை ஏறி மிதிக்கும் குஷ்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 9, 2021, 2:35 PM IST
Highlights

நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்.  கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது. 

பாஜக தமிழகத்தில் வளர்ந்துவருகிறது, பாஜக எங்கே இருக்கிறது என கேட்டநிலையில் தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது, சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு அதிரடியாக பேசியுள்ளார். மதுரை தெப்பகுளம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற  பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:  

பாஜக தமிழகத்தில் வளர்ந்துவருகிறது, பாஜக எங்கே இருக்கிறது என கேட்டநிலையில் தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது, சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும், நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்.  கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது.

 

கமல் அறிவித்த பெண்களுக்கான அறிவிப்பை நான் வரவேற்கிறேன், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டிக்கபட வேண்டும். இந்த சம்பவத்தில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களாகவோ எந்த கட்சியாகவோ இருந்தாலும் தண்டனை அளிக்க வேண்டும். திரையரங்குகளில் 50சதவித அனுமதி என்ற அறிவிப்பால் அரசுக்கு எதிராக ரசிகர்கள் பேசதான் செய்வார்கள், விதிகளின்படிதான் திரையரங்குகளில் 50சதவித இடங்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. ரஜினி யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனக்கு தேவையில்லாத ஒன்று, யாரிடமும் பாஜகவிற்கு ஆதரவு கேட்க வேண்டிய நிலை உள்ளது. எதிர்கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு பற்றியோ ஊழல் பற்றியோ பேச அருகதையில்லை, திமுகவில் தொண்டராக நான் இருந்தபோது எனது வீட்டில் கல் எறிந்தது குறித்து பேச முயன்றபோது கண்டுகொள்ளாத ஸ்டாலின் தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார். 

பெண்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்புகள் தரப்படும் என மோடி விரும்புகிறார். அதிமுக பொதுக்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் அப்படி வந்தால் பின்னர் அது குறித்து பேசலாம் என்றார். 
 

click me!