முன்னாள் முதலமைச்சர் ஜெயல்லிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் இருட்டடிப்பு செய்தது போல், எம்ஜிஆரின் படமும் இருட்டடிப்பு செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
எம்ஜிஆர் புகைப்படம் அகற்றம்
மதுரை தமிழ்சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆர். பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழ் சங்கத்தை மதுரையில் நடத்தி, எட்டாவது வள்ளலாக புரட்சித்தலைவர் திகழ்கிறார். ஆனால் உலகத் தமிழ் சங்கத்தில் புரட்சித்தலைவர் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த படம் தற்போது அகற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் புரட்சித்தலைவரை சித்தப்பா என்று கூறி வருகிறார். தற்போது புரட்சித்தலைவர் படம் அகற்றப்பட்டது அவரின் கவனத்திற்கு வந்ததா? புரட்சித்தலைவர் என்னை வளர்த்தெடுத்தார் என இன்று வரலாற்றை திருத்தி கூறி வருவதை இன்றைக்கு விவாத பொருளாக உள்ளது. இன்றைக்கு புரட்சித்தலைவர் படத்தை அகற்றி இருப்பது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, உங்கள் மனசாட்சி கேட்டுக்கொள்கிறதா?
இரட்டை வேடம் அல்ல, இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.! திமுகவிற்கு எதிராக சீறும் அண்ணாமலை
இருட்டடிப்பு செய்வது ஏன்.?
அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த திராவிட இயக்கத்தை , தனது திரைப்படங்கள் மூலம் தான் செல்லும் இடங்கள் எல்லாம் இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று பாடுபட்ட புரட்சித்தலைவர் படத்தை அகற்றியது நியாயம் தானா? மதுரையில் கள ஆய்வுக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வில் முதலில் புரட்சித்தலைவர் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினால்,எம்ஜிஆர் பக்தர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். அம்மாவின் திட்டமும் இரட்டடிப்பு செய்யப்பட்டது போல் புரட்சித்தலைவரின் படமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்