நீட் என்ன ஆச்சு.? எய்ம்ஸ் கட்டியாச்சா.? மதுரைக்கு வரும் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆர்பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Feb 6, 2023, 10:12 AM IST
Highlights

நீட் தேர்வு ரத்து, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் தொடர்பாக மதுரைக்கு வரும் அமைச்சர் உதயநிதி பதில் அளிப்பாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதியோர் ஓய்வூதியம் என்ன ஆச்சு.?

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட விழாவானது நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவில் பங்கேற்பதற்காக, கடந்த இரண்டு நாட்களாக மதுரையிலே பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் உண்மையிலேயே தடை செய்யப்பட்டு இருக்கிற, ரத்து செய்யப்பட்டு இருக்கிற முதியோர் ஓய்வு ஊதியங்களை அந்த பயனளிகளுக்கு வழங்குவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் முன் வருவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்க ஈகோவை கழட்டி வையுங்கள்!பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்!யாருக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெ. நிழல்


மாணவர்களுக்கு மடிக்கணினி என்ன ஆச்சு.?

மாணவர்கள் சமுதாயத்துக்கு மடிக்கணினி வழங்குகிற திட்டத்திற்குரிய உண்மை நிலையை உதயநிதிஸ்டாலின் விளக்கம் கொடுப்பதற்கு முன் வருவாரா? கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியிலே அறிவித்திருப்பதை உதயநிதி ஸ்டாலின் அது குறித்து ஏதேனும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவதற்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா? ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை அது குறித்து பிரச்சாரம் செய்தாரே அதை நிறைவுகூர்ந்து இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் அவருடைய பங்களிப்பை பொதுமக்களிடத்திலே விளக்கி சொல்வதற்கு முன் வருவாரா?  தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறதே அதற்கு அவர் என்ன விளக்கம் சொல்ல போகிறார், இன்றைக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம். இது போன்ற திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு முழுமையாக செயல்படாமல் இல்லாமல் முடங்கி கிடக்கிறதே, இதற்கெல்லாம் விளக்கம்  அளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விளையாட்டு உபகரணம் என்ன ஆச்சு.?

மதுரையில் நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மிகப் பிரம்மாண்டமான அளவிலே செய்திருக்கிற வகையிலே, மக்களை முகம் சுளிக்க வைக்கிற அளவிலே பிரம்மாண்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நீட் தேர்வை பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்பதெல்லாம் மக்கள் ஆவலோடு இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஏற்கனவே விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதுரையில் பங்கேற்ற போது, அதெல்லாம் எத்தனை இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கிடைத்தது என்பதை இளைஞர்கள் இன்றைக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை வெளியிடுவாரா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

''பொறுத்திருந்து பாருங்கள்''..! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஓபிஎஸ் அணி.?

click me!