எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என பட்டம் வழங்கியது ஏன்.?விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஆர்.பி.உதயகுமார்

By Ajmal Khan  |  First Published Aug 23, 2023, 1:24 PM IST

ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார் என்று உதயநிதி கூறுகிறார். கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்று கொக்கு நினைத்து கடைசியில் குடல் வற்றி இறந்தது போல்  திமுகவின் பேச்சு உள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.


எடப்பாடிக்கு புரட்சி தமிழர் பட்டம்

அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை வழங்கியதையொட்டி மதுரை தெப்பக்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் பல்வேறு புரட்சிகரமான சாதனை திட்டங்களை எடப்பாடியார் வழங்கியதால், புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டினார்கள். ஆனால் அவர் என்ன சாதனை செய்தார் என்று சில ஞானசூனியங்கள் பேசி வருகிறார்கள், அவர் செய்த சாதனைத் திட்டங்களை படித்துப் பார்த்தாலே தெரியும் அந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் தான் என தெரியும் என கூறினார்.  

Tap to resize

Latest Videos


பொய்களை கூறிய ஸ்டாலின்

அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதில்  உலக பொதுமறையாகவும், தேசிய திருமுறையாகவும் விளங்கும், திருக்குறளை தேசிய நூலகமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டிலும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாயமாக பாட மொழியாகவும்,  பயின்று மொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.  ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொய் மூட்டைகளை ஸ்டாலின் அவிழ்த்து விட்டு, திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை திருப்பி மாற்றி எழுத ஸ்டாலின் முயற்சிக்கிறார். 

ராகுல் பிரதமரானல் நீட் தேர்வுக்கு விலக்கா.?

மேலும் இந்த அதிமுக மாநாட்டில்  2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி அமைக்கும் வியூகத்தின் படி செயல்படவும் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்கவும் இதில் சூளுரை ஏற்க்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாமல், ஊடக விவாதங்களில் சிலர் பேசி வருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள் என கூறினார். ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார் என்று உதயநிதி கூறுகிறார். கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்று கொக்கு நினைத்து ,கடைசியில் குடல் வற்றி இறந்தது போல்  திமுகவின் பேச்சு உள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி.. சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நீதிமன்றம்..!

click me!