ரவிகுமார் விசிக எம்.பி., இல்லை திமுககாரர்னு அப்பவே அந்த டவுட் இருந்தது... சந்தேகத்தை உறுதி செய்த பாஜக நிர்வாகி

By Thiraviaraj RMFirst Published Sep 8, 2021, 11:52 AM IST
Highlights

நீதிமன்றத்திலேயே தான் தி மு க வின் உறுப்பினர் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இனி ரவிக்குமார் தி மு கவின் பிரதிநிதி என்றே அழைப்பார்கள் என நம்புகிறேன்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது தான் ஒரு திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் என குறிப்பிடவில்லை. என்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்பதால் எனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரவிக்குமார் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, "நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல. தி மு க உறுப்பினர். வி சி க வின் வேட்பாளர் தி மு கவின்  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது" என்று ரவிக்குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், 2019 தேர்தலில் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு  தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் கடந்த இரண்டு  வருடங்களில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதியாகவே பேசி வந்தார். 

நான் பலமுறை பல நிகழ்ச்சியின் இடையீட்டாளர்களிடம் ஒரே கட்சியை சார்ந்த இருவர் எப்படி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றெல்லாம் கூட கேட்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து பதில் பேசாது இருந்தனர் இடையீட்டாளர்கள். நீதிமன்றத்திலேயே தான் தி மு க வின் உறுப்பினர் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இனி ரவிக்குமார் தி மு கவின் பிரதிநிதி என்றே அழைப்பார்கள் என நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!