என்ன ஒரு நெகிழ்ச்சியான டுவீட் !! அதப்பார்த்து தான் பார்லிமெண்ட்டுக்கே வந்தேன் !!கதறி அழுத ரவி சங்கர் பிரசாத் !!

By Selvanayagam PFirst Published Aug 7, 2019, 2:57 AM IST
Highlights

காஷ்மீர் விவகாரம் குறித்து  மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவைப் பார்த்து தான் தான் நாடாளுமன்றத்துக்கு வந்ததாக தெரிவித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா குறித்து பேசும்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.
 
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.


 
சுஷ்மாவின் மறைவு பிரதமர்மோடி உள்ளிட்டோரை  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாவின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்   டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்அஞ்சலி செலுத்ததி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு வந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது,  சுஷ்மா சுவராஜின் டிவிட்டை பார்த்துவிட்டுத்தான்  இன்று நாடாளுமன்றம் வந்தேன் என தெரிவித்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் தற்போது இறந்து வீட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை, என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார். அவர் பேசிக்கொண்டே இருக்கும் போதே செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி  அழுதார்.

click me!