ரேஷன்கார்டுகளுக்கு மீண்டும் ரூ.1,000... எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2020, 4:26 PM IST
Highlights
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 2வது முறையாக ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ஏப்ரல்- 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரது அறிவிப்பில், ‘’தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி முதல்  மதியம் 1 மணி வரை இயங்கும் 
அரிசி ரேஷன் கர்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும். 

ஏற்கனெவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30ம் தேதி வரை தொடரும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 2வது முறையாக ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை மற்றும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவின் பரிந்துரைப்படி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மத்திய அரசு அறிவித்து அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வரை உள்ள நிலையில் நாளை காலை பிரதமர் மோடி 10 மணிக்கு உரையாற்ற இருக்கிறார். 
click me!