15 வயது சிறுமி 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமறைவு..!

Published : Jul 28, 2020, 11:15 AM ISTUpdated : Jul 29, 2020, 02:44 PM IST
15 வயது சிறுமி 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமறைவு..!

சுருக்கம்

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். 

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். 

நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன் காதலனுடன் சென்ற நிலையில் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தேடி மீட்ட போலீசார் காதலனையும் கைது செய்தனர். இதனையடுத்து, குழந்தை நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், 2017ல் நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனையடுத்து, முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

முன்னதாக அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!