அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு..!

Published : Jul 28, 2020, 10:37 AM IST
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்...  ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். 

நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் ஏ.முருகேசன் (நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!