பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல்: செப்- 25 அன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2020, 3:12 PM IST
Highlights

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்கபட்டு வருகிறது. பெரும்பான்மையான மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில  மாணவர்கள் சரியான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம்  கோரியுள்ளதால்,

பொறியியல் சேர்க்கைக்காக பெரும்பாலான மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மாணவர்கள் சரியான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால், அவர்களின் நலன் கருதி தரவரிசைப் பட்டியல் 25-9-2020 அன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விழையும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண் (random number) 26-8-2020 அன்று வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையின் காரணமாக, மாணவர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக திறமை பெற்ற பேராசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர், முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் பங்கேற்புடன் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்கபட்டு வருகிறது. பெரும்பான்மையான மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில  மாணவர்கள் சரியான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால், 

மாணவர்களின் நலன் கருதி 17-9-2020 அன்று  வெளியிடப்பட வேண்டிய, தரவரிசைப் பட்டியல் 25-9-2020 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களின் account-ஐ login செய்து தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். மாணாக்கர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், 044-22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 

click me!