
கபாலி படம் வரும் முன் வந்த அதிர்வுகளை விட அது ரிலீஸான பின் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட அதிர்வை யாராலும் மறந்திருக்க முடியாது.
அதாவது அந்தப் படத்தின் கதை மற்றும் மேக்கிங் விஷயங்கள் விமர்சிக்கப்பட்டபோது ‘தன்னை சாதி அடிப்படையிலேயே விமர்சிக்கிறார்கள்.’ என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் ரஞ்சித். அதாவது தான் ஒரு தலித் என்பதால், தன்னுடைய வளர்ச்சியையும் புகழையும் பொறுக்க முடியாமல்தான் விமர்சனத்தை வைக்கிறார்கள் என்று பாய்ந்தார். ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு சிலரிடமிருந்து ஆதரவு வந்தாலும் கூட பலர் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.
’ரஞ்சித் சொல்லித்தான் அவர் ஒரு தலித் என்பது தெரியும்! வெள்ளிக்கு வெள்ளி திரைக்கு பல படங்கள் வெளி வருகின்றன அதன் படைப்பில் பல தலித்கள் இருக்கின்றன. அதற்காக படத்தை விமர்சிப்பதென்பது அந்த தலித் நபர்களை விமர்சிப்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்று பொளந்து கட்டினர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை வைத்து ‘சர்வம் தாள மயம்’ எனும் ஒரு படத்தை இயக்குகிறார் ராஜீவ் மேனன். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் கதை...’ஒரு தலித் இளைஞன் சங்கீத மோகம் கொண்டு அலைவது பற்றியதாம்’.
படத்தை விமர்சித்தால் அதற்கு என்னை சாதி ரீதியாக பார்க்கின்றனர்! என்று தலித் அடையாளத்தை கேடயமாக பயன்படுத்திய ரஞ்சித், ஏன்? இப்படியொரு கதையை படமாக்கவில்லை! தலித்தை பெருமைப்படுத்துவது போல் அமையுமே!...என்று வறுக்க துவங்கியுள்ளனர் இணையதள விமர்சகர்கள்.
குட் கொஸ்டீன்! பட் ஹூ கேன் ஆன்ஸர்?