போட்டுத்தாக்கும் "ரஜினி"... கதிகலங்கும் சில பல அரசியல் வாதிகள்...! சூடேற்றிய "சமூக விரோதிகள்" என்ற சொல்...

Asianet News Tamil  
Published : May 30, 2018, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
போட்டுத்தாக்கும் "ரஜினி"... கதிகலங்கும் சில பல அரசியல் வாதிகள்...! சூடேற்றிய "சமூக விரோதிகள்" என்ற சொல்...

சுருக்கம்

ranjini reacted well in all the manner for reporters questions

போட்டுத்தாக்கும் ரஜினி... கதிகலங்கும் சில பல அரசியல் வாதிகள்...! சூடேற்றிய "சமூக விரோதிகள்" என்ற சொல்...

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100  நாட்களாக நடைப்பெற்ற போராட்டத்தில், கடைசி நிமிடத்தில் வன்முறை வெடித்தது.

இதில் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

அப்போது,"ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

சமூக விரோதிகள் என்ற வார்த்தைக்கு சில கட்சியினர் கொதித்து எழுந்துள்ளதாக  செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விமான  நிலையத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த் பட்டு பட்டுநு சும்மா அதிரடி பதில்களை சொன்னார்.

பத்திரிக்கையாளர் ஒருவர்... சமூக விரோதிதான் காரணம் என  சொல்வதற்கு, திருமாவளவன் மற்றும் கம்மூனிஸ்ட் கட்சியினர் கண்டனம்  தெரிவித்து உள்ளார்களே என்ற கேள்விக்கு....உண்மையில் விஷகிருமிகள்...சமூக விரோதிகள் தான் காரணம் என அடித்து கூறுகிறார் ரஜினி.....

அது எப்படி உங்களுக்கு தெரியும் என்ற கேள்விக்கு.......

அதெல்லாம் எனக்கு  தெரியும் என  தில்லாக கூறிய ரஜினி...இவை அனைத்தும்  நேரடியாக  பாதிக்கப்பட்டவர்களிடம் அனைத்து விவரமும் கேட்டறிந்து  பின்னர் தான்  உறுதியாக தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?