
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆறுதல் கூறினார்.
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேராக துப்பாக்கி சூட்டில் காயமடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி மக்களின் உடல் நலம் குறித்து விசாரித்த பின்பு அங்கிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காவலர்களையும் ஆட்சியர் அலுவலகத்தையும் தாக்கியதும், ஸ்டெர்லைட் குடியிருப்புகளுக்கு தீ வைத்தததும் சமூக விரோதிகள் தான் என ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார்.
காயமடைந்தவர்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது என்றும் மக்கள் அனைத்துக்கும் போராட்டம்.., போராட்டம்... என்று புறப்பட்டால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என ஆவேசமாக பேசினார்.
ரஜினிகாந்திடம் செய்தியாளர் ஒருவர் போலீசார் மீது தான் த